உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகாபலிபுரத்தில் ஒருகலங்கரை விளக்கம்

மகாபலிபுரத்தில் ஒருகலங்கரை விளக்கம்

காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு, தென்னிந்தியாவை ஆண்ட பல்லவர்களின் துறைமுக நகரம் மகாபலிபுரம் ஆகும். 1887ம் ஆண்டு மெட்ராஸ் துறைமுக வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மகாபலிபுரத்தில் ஒரு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.தற்போதைய கலங்கரை விளக்கத்தின் கட்டுமானம், ஒரு வட்டவடிவ 26 மீட்டர் உயரமுள்ள கிரானைட் கோபுரம் ஆகும். 1900ம் ஆண்டு இந்த கலங்கரை விளக்கம் கட்டி முடிக்கப்பட்டது. சுழலும் ஒளியியல் மற்றும் 55 எம்.எம்., பெட்ரோலியம் நீராவி பர்னர் மற்றும் அதன் ஒளிக் கற்றைகளை 24 கடல் மைல் துாரத்துக்கு அனுப்பும் வகையில், 1901ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல், இந்த கலங்கரை விளக்கம் இயங்க துவங்கியது.கடந்த 2012ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை, இந்தியாவின் கலங்கரை விளக்கங்களின் இரண்டு நினைவு அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. அதில், மகாபலிபுரம் (மாமல்லபுரம்) கலங்கரை விளக்கம் குறித்து, அஞ்சல் துறையால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூ.5 மதிப்புள்ள அஞ்சல் தலையாகும். (நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை