மேலும் செய்திகள்
கண் பரிசோதனை முகாம் எம்.பி.,துவக்கி வைப்பு
01-Sep-2025
அன்னுார்; கரியாம்பாளையத்தில் நடந்த முகாமில் 51 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. கரியாம்பாளையம் ஊராட்சி மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில், எல்லப்பாளையம் பிரிவில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில், 51 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கண் மருத்துவர்கள் கூறுகையில்,' 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் தானம் செய்ய முன்வர வேண்டும்,' என்றனர்.
01-Sep-2025