120 பேருக்கு கண் சிகிச்சை
அன்னுார்; கோவை, சங்கரா கண் மருத்துவமனை, அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம், எஸ்.எம்.எப்., மருத்துவமனை சார்பில், நேற்று எஸ்.எம்.எப்., மருத்துவமனையில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.டாக்டர் சதீஷ் பாபு முகாமை துவக்கி வைத்தார். முகாமில், பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல், மாறு கண், கண் புரை உள்ளிட்ட குறைபாடுகளுக்கு 120 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.தேர்வு செய்யப்பட்டோர், இலவச அறுவை சிகிச்சைக்கு கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனர். டவுன் ரோட்டரி சங்க தலைவர் அம்பாள் நந்தகுமார், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் லட்சுமண மூர்த்தி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.