உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாட்டு பொங்கலுக்கு கடைகளில் குவிந்த பேன்சி அணிகலன்கள்

மாட்டு பொங்கலுக்கு கடைகளில் குவிந்த பேன்சி அணிகலன்கள்

கோவை; கால்நடைகள் வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டாலும், இன்று நடக்கும் மாட்டுப்பொங்கலையொட்டி, கடைகளில் நேற்று கால்நடைகளை அலங்கரிக்கும் அணிகலன்கள் விற்பனையாகின.கோவை மாவட்டத்தில், 1.5 லட்சத்துக்கும் அதிகமான கால்நடை விவசாயிகள் உள்ளனர். விளை நிலங்கள் பரப்பளவு குறைவு, தீவனங்கள் பற்றாக்குறை, விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கால்நடை விவசாயிகளின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து வருகிறது.கால்நடைகளை விற்பதால், 10 கறவை மாடுகள் இருந்த இடத்தில், தற்போது ஐந்துக்கும் குறைவாகவே உள்ளன. வழக்கமாக மாட்டு பொங்கலுக்கு மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கான அணிகலன்கள், விற்பனை ஜோராக நடக்கும்.இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. நேற்று, கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, வண்ணக் கயிறுகள், 'ஜல் ஜல்' ஒலி எழுப்பும் சலங்கைகள், ஜிமிக்கி உள்ளிட்ட அணிகலன்களால் விவசாயிகள் அலங்கரித்தனர்.மாடுகளுக்கு தேவையான கழுத்து கயிறு, மூக்கணாங் கயிறு, திருஷ்டிக்கான கருப்பு கயிறு, ஒலி எழுப்பும் மணி வகைகள் உள்ளிட்டவை பல வண்ணங்களில் டவுன்ஹால், பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் விற்கப்பட்டன.பெரிய கடை வீதி வியாபாரிகள் கூறியதாவது:மாட்டு பொங்கலுக்கு ரேக்ளா மாடுகள், சாதாரண மாடுகளுக்கு என, தனித்தனியே கயிறு, அணிகலன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மாராப்பு கயிறு, மணி, சங்குகள் பொருத்திய கழுத்து 'பெல்ட்' உள்ளிட்டவை, புதிய வரவாக உள்ளது.பொள்ளாச்சி பகுதிகளில் ரேக்ளா மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். கோவையில் கறவை மாடு, காளை மாடுஉள்ளிட்டவற்றுக்கு கழுத்து கயிறு, கருப்பு கயிறு உள்ளிட்டவை ஜோடி ரூ.50 முதலும், கழுத்து மணி ரூ.45 முதல், 250 வரையும் விற்பனையாகிறது.சலங்கை வகைகள், ரூ. 30 முதல் கிடைக்கின்றன. மணி பொருத்திய பெல்ட் ரூ.270க்கு விற்பனையாகிறது. ஆனால், கடந்தாண்டு இருந்த கூட்டம் இந்தாண்டு இல்லை. கால்நடைகளை பெரும்பாலானோர் விற்று விட்டதே முக்கிய காரணம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை