உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணை வாயில் முறையில் விளை பொருட்கள் விற்பனை

பண்ணை வாயில் முறையில் விளை பொருட்கள் விற்பனை

சூலுார்; சுல்தான்பேட்டை வட்டாரத்தில் பண்ணை வாயில் முறையில், ரூ. 51லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.செஞ்ஞசேரிமலையடி பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தமிழரசன் கூறியதாவது:ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ -நாம் திட்டத்தின் கீழ், வியாழக்கிழமை தோறும், கொப்பரை ஏலம் நடக்கிறது. மேலும், இ - நாம் மண்டி வர்த்தகம் மற்றும் பண்ணை வாயில் முறையில், விவசாயிகளின் தோட்டத்துக்கு சென்று, அவர்கள் விளைவித்த விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்து தரப்படுகிறது. தேங்காய், தேங்காய் பருப்பு, வாழைக்காய், பூசணிக்காய், தக்காளி போன்ற பொருட்களை விற்பனை செய்யலாம். நடப்பாண்டு ஏப்ரல் முதல் தற்போது வரை, 243 விவசாயிகளிடம் இருந்து,782 மெட்ரிக் டன் விளை பொருட்கள் பெற்று, 59 லட்சத்து, 29 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதுடன் வங்கி கணக்குக்கு உடனடியாக பணம் வரவு வைக்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு நகல் ஆகியவற்றை செஞ்சேரி மலையடிபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை