உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கள் விற்பனை செய்த விவசாயி கைது

 கள் விற்பனை செய்த விவசாயி கைது

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொக்கனூரில் விற்பனைக்காக கள் வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். கிணத்துக்கடவு, சொக்கனூரை சேர்ந்த விவசாயி ஜெயக்குமார், 35. இவர், விற்பனைக்காக கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஜெயக்குமாரிடம் விசாரித்த போது, சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து, 35 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கள் விற்பனை செய்ததற்காக ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை