உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏழு அடியில் வளர்ந்த புடலை மகிழ்ச்சியில் விவசாயி

ஏழு அடியில் வளர்ந்த புடலை மகிழ்ச்சியில் விவசாயி

ஆனைமலை; ஆனைமலை அருகே புடலங்காய், ஏழு அடி அளவில் வளர்ந்துள்ளது.ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை, நெல், பந்தல் காய்கறி சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், பந்தல் காய்கறியாக, புடலங்ககாய், பாகற்காய் போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது.இந்நிலையில், ஆனைமலை அருகே பெத்தநாயக்கனுாரை சேர்ந்த ஜோதிமணி என்பவரது தோட்டத்தில், ஏழு அடி அளவிலான புடலை வளர்ந்துள்ளது. இதை கண்ட விவசாயி மகிழ்ச்சி அடைந்துள்ளார். விவசாயி கூறுகையில், ''பருவமழை கை கொடுத்ததால், அரை ஏக்கரில் பந்தல் காய்கறியாக புடலை கடந்த, மூன்று மாதத்துக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்டது. குறைந்தபட்சம், மூன்று அடி வரை தான் புடலை வந்துள்ளது. தற்போது, அதிக பட்சமாக, ஏழு அடி வரை நாட்டு ரகம் புடலை வளர்ந்துள்ளது. பந்தலில், 10க்கும் மேற்பட்ட புடலை இதுபோன்று வளர்ந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக வளர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ