உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை, : கோவை மாவட்டத்தில், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், வரும் 25ல் நடக்கிறது.நடப்பு மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 25ம் தேதி காலை 9:30 மணிக்கு நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடக்கிறது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாவது தள கூட்ட அரங்கில் காலை 10:30 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க, விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ