மேலும் செய்திகள்
ரூ.57.47 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
23-Apr-2025
அன்னுார் : ஏல விற்பனையில் தேங்காய் கொப்பரைக்கு மிக அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று வாராந்திர விவசாய விளை பொருள் ஏல விற்பனை நடந்தது. இதில் 2,541 கிலோ எடையுள்ள 6,380 தேங்காய்கள் ஏலத்துக்கு வந்திருந்தன.குறைந்தபட்சமாக, ஒரு கிலோ 48 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 55 ரூபாய் 60 பைசாவுக்கும் விற்பனையானது. இதையடுத்து தேங்காய் கொப்பரை ஏலம் நடந்தது. இதில் குறைந்தபட்சமாக 165 ரூபாய் 16 பைசா முதல் அதிகபட்சமாக 180 ரூபாய் 90 பைசா வரை விற்பனை ஆனது. . இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர், கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் ஆகியோர் தெரிவித்தனர். விவசாயிகள் கூறுகையில், 'இந்த சீசனில் தேங்காய் கொப்பரைக்கு இதுவே அதிகபட்ச விலை ஆகும்,' என்றனர்.
23-Apr-2025