உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

மலர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

ஆனைமலை : பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயிகள் சிலர், ஆயுதபூஜை சீசனை முன்னிட்டு, சம்பங்கி, செண்டுமல்லி என, மலர் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை, காய்கறி சாகுபடி மட்டுமின்றி, விவசாயிகள் பலர், கால்நடை வளர்த்தல் தொழிலை மேற்கொள்கின்றனர். இதுஒருபுறமிருக்க சிலர், சீசனுக்கு ஏற்ப, சம்பங்கி, செண்டுமல்லி என, மலர் சாகுபடியில் ஈடுபட்டும் வருகின்றனர்.அதன்படி, ஆயுத பூஜை சீசனை கருத்தில் கொண்டு, ஜமீன்ஊத்துக்குளி பகுதியில், செண்டுமல்லி நாற்று நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயராக உள்ளது.விவசாயிகள் கூறியதாவது:விவசாயிகள் சிலர், தினசரி செலவுக்கு உதவும் விதமாக, மலர் சாகுபடி மேற்கொள்கின்றனர். சுற்றுப்பகுதி கிராமங்களில், செண்டுமல்லி, கோழிக்கொண்டை, சம்பங்கி உள்ளிட்டவை குறிப்பிட்ட பரப்பில் வளர்க்கப்படுகின்றன.சம்பங்கி செடிகள் நீண்ட காலத்திற்கு பயன்தரக்கூடியவை. உரம் மற்றும் பயிர் பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்பட்டால், தினசரி மலர்கள் பறிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது, ஆயுதபூஜை நெருங்குவதால், அதற்கேற்ப அறுவடை துவக்கப்படும். கட்டுபடியான விலை கிடைக்கும் என்பதால் இழப்பு ஏற்படாது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ