மேலும் செய்திகள்
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றுங்க
08-Jul-2025
கோவை; கோவைக்கு வருகை தந்த, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுஹானிடம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனு:கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், தென் மேற்கு பருவமழை குறைந்து, வறண்ட பகுதியாக மாறி வருகிறது. பாண்டியாறு -- புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.கோவை மாவட்டத்தின், தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில், ஆனைமலை -நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கோவை நகருக்கு சர்க்குலர் ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வாயிலாக, பண்ணை பொருட்களை எளிதாக நகர்வு செய்யலாம்.மாம்பழம், வாழை, சப்போட்டா ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய, அனுமதிக்க வேண்டும். நகர வளர்ச்சி திட்டங்களில் இருந்து, விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
08-Jul-2025