உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனத்துறை பிடிவாதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள்

வனத்துறை பிடிவாதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள்

கோவை; 'வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழையாமலிருக்க, வன எல்லையில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் தோல்வியை தழுவிய சூழலில், அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்பதற்காக திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்ற பிடிவாத போக்கை, வனத்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், வனத்தை விட்டு வெளியேறும் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மனிதர்களும் பலியாகின்றனர். அதை தடுக்க, சிறிய பகுதிகளில் இரும்பு கம்பி வேலியும், ரயில்வே தண்டவாளங்கள் பொருத்தும் பணி நடக்கிறது. இது பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.வனப்பகுதியை ஒட்டி சமதளத்தில், பொருத்தும் ரயில்வே தண்டவாளங்கள் வெற்றியடைந்துள்ளன எனவும் குறுகிய வளைவுகளில் அமைக்கப்பட்டவை, தோல்வியை தழுவியுள்ளன எனவும் கருத்தை தெரிவிக்கின்றனர். இரும்பு கம்பி வேலி திட்டம் தோல்வி என்ற கருத்தை, வனத்துறை அதிகாரிகள் ஏற்க மறுக்கின்றனர். இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி கூறியதாவது:விலங்குகள் விளைபயிர்களை சேதப்படுத்தாமலும், மனித உயிர்களை கொல்லாமலும் இருக்கும் வகையில், திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதை நேர்மையான அதிகாரிகளை கொண்டு மேற்கொள்ள வேண்டும். அரசு நிதி ஒதுக்கி விட்டதே என்பதற்காக, திட்டத்தை செயல்படுத்துவதை விட்டு, மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்பட வேண்டும்.இவ்வாறு, கந்தசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ