முழுமையற்ற விபரம் சரி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
அன்னுார்; விவசாயிகள் பிரதமர் கவுரவ நிதித் திட்டத்தில் பயன்பெற, முழுமையற்ற விபரங்களை சரி செய்து கொள்ள வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கை : பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ், தகுதியுடைய விவசாயிகள் அனைவரும், அன்னுார் வட்டாரத்தில் உள்ள வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் வருகிற 31ம் தேதி வரை நடைபெற உள்ள முகாமில் பதிவு செய்து கொள்ளலாம்.இத்திட்டத்தில் 20வது தவணைத் தொகை ஜூன் மாதம் வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான விவரங்கள், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது, இ.கே.ஒய்.சி, உள்ளிட்ட முழுமையற்ற அனைத்து விதமான விபரங்களையும் சரி செய்து இந்தத் திட்டத்தில் பயன்பெற வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.