உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவரைத் தேடி உழவர் நலத்துறை விழா; மாவட்டம் முழுக்க இன்று நடக்கிறது

உழவரைத் தேடி உழவர் நலத்துறை விழா; மாவட்டம் முழுக்க இன்று நடக்கிறது

கோவை; கோவை மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், உழவரைத் தேடி உழவர் நலத்துறை விழா இன்று நடக்கிறது.அரசின் பல்வேறு துறைகள் சார்பாக விவசாயிகளுக்கு உழவர் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களை விவசாயிகளுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் இன்று உழவரைத் தேடி விழா நடக்கிறது.வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை வேளாண் விற்பனைத் துறை, வேளாண் பொறியியல் துறை, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பட்டு வளர்ச்சி, மீன் வளர்ச்சி, கூட்டுறவு சங்கங்கள், வட்டார விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், கரும்பு அலுவலர்கள், சொட்டு நீர் பாசன நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் துறை சார்ந்த மானிய திட்டங்களை தெரிவிக்க உள்ளனர்.விழாவில், மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படும். குறைதீர்க்க விண்ணப்பங்கள் பெறப்படும். மண், தண்ணீர் மாதிரிகள் ஆய்வுக்கு பெறப்படும். கோவை மாவட்டத்தில், 12 வட்டாரங்களிலும் தலா 2 கிராமங்களில் விழா நடக்கிறது.அன்னுார், ஒட்டர்பாளையம், காரமடையில் இலுப்பநத்தம், வெள்ளியங்காடு, மதுக்கரையில், கருஞ்சாமிக் கவுண்டன் பாளையம், மலுமிச்சம்பட்டி, பெ.நா.பாளையத்தில், பன்னிமடை, நாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளத்தில் இடிகரை, காளப்பட்டி கிழக்கு, சூலுாரில் கரவழி மாதப்பூர், பதுவம்பள்ளி, சுல்தான்பேட்டையில் வாரப்பட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், தொண்டாமுத்துாரில் சித்திரைச் சாவடி கிழக்கு, தென்னமநல்லுாரில் விழா நடக்கிறது. விவசாயிகள் பங்கேற்று பயனடைய மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ