உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் நல சேவை மையங்கள்; வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

உழவர் நல சேவை மையங்கள்; வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- வேளாண் பட்டப் படிப்பு முடித்த இளைஞர்களின் படிப்பறிவும், தொழில்நுட்பத் திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண் உற்பத்தியினை உயர்த்திடும் வகையில் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட் கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும். அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற முடியும். கோவை மாவட்டத்தில் 16 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட்ட பின், இத்திட்டத்தில் மானிய உதவி பெற https://www. magrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை