உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோதவாடி குளத்துக்கு நீர் வழங்கிய விவசாயிகள்

 கோதவாடி குளத்துக்கு நீர் வழங்கிய விவசாயிகள்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, கோதவாடி குளம் 384 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தற்போது, பி.ஏ.பி., மெயின் கால்வாயில் இருந்து பாசன வசதிக்காக ஜக்கார்பாளையம், கோதவாடி வரை தண்ணீர் விடப்பட்டது. இதில், கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் மழைப்பொழிவு அதிகம் பெய்திருந்ததால், விவசாயிகள் சிலர் பி.ஏ.பி., நீரை பயன்படுத்தவில்லை. இதனால், 15 மற்றும் 20வது மடை வழியாக கோதவாடி குளத்திற்கு, இரண்டு நாட்கள் தண்ணீர் விடப்பட்டதில், 30 முதல் 40 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், கோதவாடி முன்னாள் ஊராட்சி தலைவர் ரத்தினசாமி மற்றும் பலர் கோதவாடி குளத்தை பார்வையிட்டனர். மக்கள் கூறியதாவது: விளைநிலங்கள் பாசன வசதி பெற பி.ஏ.பி., நீர் விடப்பட்டது. பெரும்பாலான பகுதியில் மழை காரணமாக, கிணறு மற்றும் நீரோடை பகுதிகளில் ஓரளவு தண்ணீர் நிறைந்து காணப்பட்டது. இதனால், பி.ஏ.பி., நீர் கோதவாடி குளத்திற்கு விடப்பட்டது. இந்தக் குளத்தில் முழுவதுமாக நீர் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்தால், கோதவாடியை சுற்றியுள்ள பல கிராமங்கள் பயனடையும். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ