மகள் கல்வி கட்டணம் செலுத்தமுடியாமல் தந்தை தற்கொலை
கோவை; மகள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த தந்தை, துாக்கிட்டு தற்கொலை செய்தார்.கோவை, சொக்கம்புதுாரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,56; இவருக்கு சரியான வேலை கிடைக்காதாதல், பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். மகளுக்கு கல்லுாரியில் கட்டணம் செலுத்த பலரிடம் பணம் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.