உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கைகொடுக்கும் மழை; தக்காளி நடவு துவக்கம்

கைகொடுக்கும் மழை; தக்காளி நடவு துவக்கம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு செட்டியக்காபாளையம் பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி நடவு செய்ய துவங்கியுள்ளனர். சிலர் தக்காளியுடன் சேர்த்து ஊடுபயிராக வெங்காயம் நடவு செய்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி நடராஜ் கூறியதாவது:அரை ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளோம். பாத்தியின் ஓரத்தில் வெங்காயம் நடவு செய்துள்ளோம். தக்காளி நடவு செய்து, 40 நாட்கள் ஆகிறது. இன்னும் 20 நாட்களில் பறிப்பு துவங்கி விடுவோம். இதேபோன்று வெங்காயம் நடவு செய்து 20 நாட்களாகிறது. தற்போது வரை மூன்று முறை களையெடுத்துள்ளோம்.நாற்று நடவு முதல் தற்போது வரை, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது. பயிர்களுக்கு இயற்கை மற்றும் ரசாயன உரம் இரண்டுமே பயன்படுத்துகிறோம்.தற்போது மார்க்கெட்டில், தக்காளி விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே, அறுவடை காலத்தில் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேலும், வெங்காயம் சொந்த பயன்பாட்டிற்காக நடவு செய்துள்ளோம். இது கூடுதலாக விளைச்சல் இருந்தால் விற்பனைக்கு கொண்டு செல்வோம்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை