உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் இறப்பு; போலீஸ் விசாரணை

பெண் இறப்பு; போலீஸ் விசாரணை

ஆனைமலை : ஆனைமலை அருகே, மில்லில் வேலை செய்த பெண் கையில் அடிபட்டு இறந்தது குறித்து கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆனைமலை அருகே, கரட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்தரசு,60. இவரது மனைவி தனலட்சுமி.58, அங்குள்ள மில்லில் கடந்த, மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்ற அவர், அதிகாலை, 2:00 மணிக்கு, 'வெப் கார்டிங்' மிஷினில் வேலை செய்த போது, சேலை மாட்டி வலதுகை முட்டியில் காயம் ஏற்பட்டது.அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !