மேலும் செய்திகள்
ஸ்கூட்டர் டெலிவரி தாமதம்; இழப்பீடு வழங்க உத்தரவு
15-Oct-2024
கோவை: காளப்பட்டி, அசோக் நகரை சேர்ந்த விஜயன் என்பவர், ஸ்ரீ ராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனத்தில், 2020 ஆக.,16ல், ரூ.5.95 லட்சம், மூன்று ஆண்டுக்கு வைப்பீடு செய்தார். முதிர்வு காலம் முடிந்து தொகையை திரும்ப பெற விண்ணப்பித்தார். அவருக்கு வழங்க வேண்டிய தொகை, ரூ.7.67 லட்சத்தை தராமல், 60,000 ரூபாய் குறைத்து வழங்கினர். நோட்டீஸ் அனுப்பியும், முழுத்தொகை வழங்க மறுத்தனர்.இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விஜயன் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்ததால், மனுதாரருக்கு ரூ.60,000 திருப்பித்தர வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.
15-Oct-2024