வேதபாட சாலை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கலாம்
கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு திருவேங்கடசாமி சாலையில் உள்ள வேதபாட சாலையில் வேதம் பயிலும் மாணவர்களின் (வித்யார்த்தி) அன்றாட உணவுக்கு உதவி செய்யலாம். நாம் கொடுக்கும் அன்னத்தை வேதம் சொல்லி சாப்பிடுவதால் புண்ணியம் ஏற்படுகிறது.அந்த புண்ணியம் அன்னம் இட்டவரின் குலத்தில் பிறந்த முன் பத்து சந்ததியர் மற்றும் பின் பத்து சந்ததியர் என்று அத்தலைமுறையினரை மோட்சமடைய செய்யும் என்பது தர்ம சாஸ்திரம். வேதபாட சாலையில் மஹாளய பட்சத்தை முன்னிட்டு, அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், பாடசாலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிதியை செலுத்தலாம். செப்., 8 அன்று துவங்கி, 22 வரை தொகையை செலுத்தலாம். நாளொன்றுக்கு, 4,000 ரூபாயை அலுவலகத்தில் நேரில் தொடர்புகொண்டு செலுத்தலாம். விபரங்களுக்கு, 0422 - 2544605, 98940 12250 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.