இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி
பொள்ளாச்சி: கோவை மாவட்ட பாரம் துாக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின், பொள்ளாச்சி ராஜாமில் ரோடு பச்சை துண்டு கிளையை சேர்ந்த தொழிலாளி விருமாண்டி கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். அவரது குடும்பத்துக்கு நகர பாரம் துாக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கவுரவ தலைவர் செல்வராஜ், நிதியுதவி வழங்கினார். சங்க தலைவர் சிராஜூதீன், தொழிற் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.