உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நள்ளிரவில் தீ விபத்து

நள்ளிரவில் தீ விபத்து

கோவை; பீளமேடு பகுதியை சேர்ந்தவர் யுகேந்திர அகர்வால். இவரது நுால் தொழிற்சாலை, டைடல் பார்க் பின்புறம் உள்ளது. நள்ளிரவு 1.30 மணிக்கு, இத்தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயின் தாக்கம் அதிகரித்ததால், பீளமேடு, கணபதி மற்றும் கோவை தெற்கு பகுதி தீயணைப்பு நிலைய 25 வீரர்கள் இணைந்து தீயணைத்தனர். ஐந்து மணி நேர போராட்டத்துக்குப் பின், காலை 6.30 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. விபத்தில் இயந்திரங்கள், நுால் பேரல்கள் எரிந்தன. பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி