உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் பெரியகுளம் ரோட்டில் தீ விபத்து

பேரூர் பெரியகுளம் ரோட்டில் தீ விபத்து

தொண்டாமுத்தூர்; புட்டுவிக்கி -- பேரூர் பெரியகுளம் ரோட்டில், சாலையோரத்தில் இருந்த காய்ந்த இலைகளில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.புட்டுவிக்கி சாலையில் இருந்து, பேரூர் சிறுவாணி மெயின் ரோட்டிற்கு செல்வதற்காக, பேரூர் பெரிய குளத்தின் கரையில், தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஒரு புறம், பேரூர் பெரியகுளமும், மறுபுறம் தோட்டங்களும், ரிசர்வ் சைட்டில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அமைத்துள்ள, அடர் வனமும் உள்ளது.இந்நிலையில், இந்த அடர் வனம் உள்ள பகுதியில், சாலையோரத்தில் இருந்த காய்ந்த இலைகளில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அந்த தீ வேகமாக பரவி, சாலையோரத்தில் இருந்த காய்ந்த இலைகள் மற்றும் ரப்பர் டயரிலும், மளமளவென தீ பிடித்தது.இதனால், 40 அடி உயரம் வரை கரும்புகை பரவியது. இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள், தீயணைப்புத் துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கோவைப்புதூர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.கோடையின் காரணமாக, அப்பகுதியில் ஏராளமான மரங்கள் காய்ந்திருந்தன. விரைந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால், பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை