உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை மேட்டில் தீ; ரத்தினபுரி மக்கள் அவதி

குப்பை மேட்டில் தீ; ரத்தினபுரி மக்கள் அவதி

கோவை; கோவை ரத்தினபுரி வேதம்பால் நகர் அருகில் காமராஜ் நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், குப்பை குவித்து வைத்து இருந்தனர். நேற்று இரவு 8:00 மணியளவில், யாரோ அதில் தீ வைத்துவிட்டனர். இதனால் குப்பையில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது. கவுண்டம்பாளையம் தீ அணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.குப்பையில் ஒர்க் ஷாப் கழிவு, ஆயில் மற்றும் டீசல் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அதிகம் கலந்து இருந்ததால், தீயில் இருந்து அதிக கரும்புகை வெளியேறியது. இந்த புகையால், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டது.கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய சிறப்பு தீ தடுப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில், '' யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீயை முழுமையாக அணைத்து விட்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி