உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுகள் கொட்டும் இடத்தில் தீ; தீயணைப்பு துறையினர் அணைப்பு

கழிவுகள் கொட்டும் இடத்தில் தீ; தீயணைப்பு துறையினர் அணைப்பு

உடுமலை : உடுமலை - தாராபுரம் ரோட்டில், குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று மதியம் தீ பரவியதால், தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.உடுமலை, தாராபுரம் ரோட்டில், பெரிய கோட்டை ஊராட்சி அய்யலுமீனாட்சி நகரிலிருந்து, மின் நகர் வரையிலும், தாராபுரம் ரோடு - திருப்பூர் ரோடு இணைப்பு சாலையிலும், ரோட்டில் இரு புறமும், குப்பை, கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.இதனால், இந்த ரோட்டில் துர்நாற்றமும், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளையும், துாய்மை பணியாளர்கள் இப்பகுதியில் முறைகேடாக கொட்டி வருகின்றனர்.அதோடு, கொட்டப்படும் கழிவுகளுக்கு தீ வைப்பதால், புகை மூட்டம் ஏற்படுவதோடு, வாகனங்கள் அதிகளவு செல்லும் நிலையில், வாகன விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.நேற்று, மதியம் கழிவுகளுக்கு தீ வைத்ததால், கடும் வெயில் மற்றும் காற்று காரணமாக, தீ வேகமாக பரவியது. கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.உடுமலை தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பிரதான ரோடுகளில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை