உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீயணைப்பு வீரர்கள் பணி; மக்களுக்கு விழிப்புணர்வு

தீயணைப்பு வீரர்கள் பணி; மக்களுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி; ஆண்டுதோறும், ஏப்., 14 முதல் 20ம் தேதி வரை, தீயணைப்பு சேவை வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, தீயணைப்பு துறை வீரர்களை போற்றியும், தீ விபத்துக்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மை கல்லுாரி, நான்காமாண்டு மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொண்டாமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களை ஒன்றிணைத்து, பேரணி நடத்தினர். அப்போது, தீயணைப்பு வீரர்களின் பணி, தீ தடுப்பு பாதுகாப்பு முறைகள் குறித்து மக்களிடையே விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை