இந்துஸ்தான் கல்லுாரியில் முதலாமாண்டு துவக்கம்
கோவை: இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, இந்துஸ்தான் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இந்துஸ்தான் கல்விக் குழும நிர்வாக அறங்காவலர் சரசுவதி, நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலாளர் பிரியாஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், இந்துஸ்தான் குழுமம் குறித்த வீடியோ விளக்கக்காட்சி திரையிடப்பட்டது.கல்லுாரி முதல்வர் ஜெயா, முதல்வர் நடராஜன் ஆகியோர், இந்துஸ்தான் கல்வி தரம், வளாக நடைமுறை, சாதனை குறித்து எடுத்துரைத்தனர். குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்கள் கஜேந்திரன், ராகுல் யாதவ் மற்றும் முன்னாள் மாணவரும்,என்டூடியோ பிரைவேட் லிமிடெ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான மகாகிருஷ்ணன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.