உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானை மிதித்து மீனவர் பரிதாப பலி

காட்டு யானை மிதித்து மீனவர் பரிதாப பலி

மேட்டுப்பாளையம்; பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் இரவு தூங்கிக் கொண்டிருந்த மீனவரை, யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை பகுதியில் பவானிசாகர் அணை பின்புறம் உள்ள நீர் தேக்கத்தில் மீனவர்கள் மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே மயில் மொக்கை என்ற நீர்த்தேக்க பகுதியில் ஜார்ஜ், 48, என்ற மீனவர் மீன் பிடி வலையை நீர்த்தேக்க தண்ணீரில் விரித்துவிட்டு, பின் கரையோரம் நேற்று முன் தினம் இரவு படுத்து தூங்கினார். இதனிடையே அங்கு வந்த காட்டு யானை இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஜார்ஜை மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த சிறுமுகை வனத்துறையினர் மற்றும் போலீசார், அவரது உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ