ரேஸ்கோர்ஸில் பிட்னஸ் சவால் வாட்டமில்லா ஓட்டத்துக்கு பரிசு
கோவை, ;கோவை ரேஸ்கோர்ஸில் நடந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், பிட்னஸ் சவாலில் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கும், பரிசு வழங்கப்பட்டது. கோயம்புத்துார் பாய்ஸ்ட்ரஸ் ரன்னர்ஸ்' அமைப்பு சார்பில், உடல் நலனை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் வகையில், சென்னை, கோத்தகிரி, குன்னுார், திண்டுக்கல், உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர், பல்லடம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில், அமைப்பினர் உறுப்பினர்கள் வாயிலாக கோ பிட் 2025' என்ற, 180 நாட்கள் ஓட்டம் நடத்தப்பட்டது. பிட்னஸ் சவால், ஆக., 1ம் தேதி நிறைவடைந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நடத்தப்பட்ட ஓட்டத்தில், 47 பேர் பங்கேற்றனர். நேற்று, அமைப்பின் ஆண்டு விழா ஓட்டம் மற்றும் கோ பிட் 2025' கொண்டாட்டம், கோவை ரேஸ்கோர்ஸில் நடந்தது. ஜகார்ட் பேப்ரிக்ஸ் இயக்குனர் விஜய்குமார் துவக்கி வைத்தார். 100க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, ஓபன்' வகை மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில், 180 நாட்களில் தொடர்ந்து பங்கேற்று திறமையை வெளிப் படுத்திய வீரர்களுக்கும், நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், வி.ஜி.எம்., மருத்துவமனை தலைவர் மோகன் பிரசாத் பரிசு வழங்கினார். சென்னை ரயில்வேயின் துணை மேலாளர் குமார், செல்லா கார்கோ உரிமையாளர் தியாகராஜா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, கிளப் தலைவர் கோவை ரமேஷ், செயலாளர் வேலாயுதம், பொருளாளர் வேதநாயகம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.