உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சின்கோ அபார்ட்மென்ட் விற்பனை துவக்க விழா

சின்கோ அபார்ட்மென்ட் விற்பனை துவக்க விழா

கோவை; கோவையில் சின்கோ நிறுவனம், இரண்டு புதிய அதிநவீன அடுக்குமாடி குடியிருப்புகளை, துடியலூர், சரவணம்பட்டியில் அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விழா, கோவை கோல்டு வின்சில் உள்ள, மெர்லிஸ் ஹோட்டலில் நடந்தது. துடியலூரில் அமைந்துள்ள புதிய அபார்ட்மென்டில், 2, 3, 4 படுக்கை அறைகள் கொண்ட பிளாட்டுகள் உள்ளன. நவீன உடற்பயிற்சி கூடம், மேற்கூரை வசதி, விளையாட்டு அரங்கம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளது.சரவணம்பட்டியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், முன்னணி பள்ளிகள் மற்றும் ஷாப்பிங் மால் அருகில், சின்கோ ஆரண்யா அபார்ட்மென்ட் அமைந்துள்ளது. இது, 2, 3 அபார்ட்மென்ட் வசதி கொண்டது. விளையாட்டு அரங்குகள், மினி அரங்கு, மின்சார வசதி, காலா ரூம் வசதிகளுடன், 60 லட்சம் ரூபாய் முதல் வீடுகள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. இதன் துவக்க விழாவில், சத்தியமூர்த்தி அண்ட் கோ நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த வடிவேலு பேசுகையில், மக்களுக்கு நிம்மதியான, வாழ்வியல் முறையை அமைத்துக் கொடுப்பதுதான் எங்களது இலக்கு, என்றார்.நிகழ்ச்சியில், சின்கோ இயக்குனர்கள் விஷால், பிரித்வி, ராகவ், பிரணவ், கிரீன்பீல்டு நிர்வாக இயக்குனர்கள் பாலசுப்பிரமணியம், வெங்கடாசலம், சதாசிவம், அரவிந்தன் பங்கேற்றனர். முதலில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை