உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரி செலுத்துபவர்களுக்கு ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை

வரி செலுத்துபவர்களுக்கு ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் ஆகியோர் கூறியுள்ளதாவது:மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய, 2024- 25ம் ஆண்டு இரண்டாம் அரை ஆண்டிற்கான சொத்து வரியை, வருகிற, 31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு, ஐந்து சதவீதம் ஊக்கத்தொகையை வழங்கும்படி, தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த வாய்ப்பினை, மேட்டுப்பாளையம் நகர பொதுமக்கள் பயன்படுத்தி, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனடியாக செலுத்தி, ஊக்கத்தொகையை பெற்று பயனடையவும்.மேலும் அனைத்து வரியினங்களையும், அலுவலகத்திலும், ஆன்லைன் வாயிலாகவும் செலுத்தலாம். எனவே நகராட்சியில் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் சேவை மையத்தில், சொத்து வரி, குடிநீர் கட்டணம் தொழில்வரி, குத்தகை தொகை ஆகியவற்றை உடனே செலுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை