உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டின் கதவை உடைத்து ஐந்து பவுன் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து ஐந்து பவுன் நகை கொள்ளை

கோவை: போத்தனுார், செட்டிபாளையம் ரோடு ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் சுப்பையா, 42. இவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த, 6ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக் கொள்ள, சுப்பையாவின் மனைவி மருத்துவமனையில் இருந்தார். கடந்த, 7ம் தேதி சுப்பையா வீட்டை பூட்டி விட்டு, மருத்துவமனைக்கு தாயை பார்க்க சென்றார். அன்றைய தினம், இருவரும் மருத்துவமனையில் தங்கினர். மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, படுக்கை அறையில் இருந்த ஐந்து பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் போத்தனுார் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !