உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குளிர்கால பாதுகாப்புக்கு உங்களுக்காக ஐந்து டிப்ஸ்

 குளிர்கால பாதுகாப்புக்கு உங்களுக்காக ஐந்து டிப்ஸ்

கு ளிர்காலத்தில் பொதுவாகவே நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படும். அதிலும் முதுமை வயதில் உள்ளவர்களுக்கு சொல்லவே வேண்டாம். பனியுடன் சேர்ந்த குளிர் காலத்தை எதிர்கொள்ள தயாராகிக்கொள்ள வேண்டியது அவசியம். வெப்பம் தரும் ஆடைகள் வயதானவர்களுக்கு இச்சமயங்களில் உடல் வெப்பநிலை குறைந்து, ஹைப்போதெர்மியா போன்றவற்றால் ஏற்படும் ஆபத்து அதிகம். சூடான ஆடைகளை அணிந்துகொள்வதுடன், குளிர்காற்று படாமல் காது, தலை போன்றவற்றை மூடிக்கொள்ள வேண்டும். நடுங்கத் துவங்கும் வரை காத்திருக்காமல், கையுறைகள், சாக்ஸ், ஸ்கார்ப், கம்பளி தொப்பி போன்றவற்றை அணிந்து கொள்ளுங்கள். காலணிகளை வீட்டிற்கு உள்ளேயும் பயன்படுத்துங்கள். சுறுசுறுப்பு அவசியம் பொதுவாக குளிர்காலம் நீண்ட நேரம் படுக்கையில் இருக்கவும், சுருண்டு படுத்து, நாள் முழுவதும் உள்ளே இருக்கவும் ஆண்டின் சரியான நேரமாகத் தோன்றினாலும், அதை தவிர்த்து, சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது அவசியம். உடற்பயிற்சி உறுப்புகளின் இயக்கத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதயநோய் உள்ளவர்கள் டாக்டர்கள் பரிந்துரையுடன் உடற்பயிற்சி செய்யவேண்டும். தண்ணீர் அவசியம் குளிர் காலங்களில் தாகம் என்பது தோன்றாது. இதனால், நீர் சரியாக குடிக்காமல் இருந்தால் நீர்இழப்பு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்திவிடும். தாகம் இல்லை என்றாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவேண்டும். சருமத்தை கவனியுங்க குளிர்காலத்தில் சருமம் வறண்டு, அரிப்பு சார்ந்த பிரச்னை பெரும்பாலும் அதிகரிக்கும் சமயம். இதனால், சரும பராமரிப்புக்கான கிரீம்களை டாக்டர்கள் பரிந்துரையின் படி பயன்படுத்துங்கள். சரியான உணவு வெப்ப அளவு குறைந்து காணப்படுவதால், வைட்டமின் டி சத்து குறைந்து பாதிப்புகள் ஏற்படலாம். ஊட்டச்சத்தான உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் டாக்டரை சந்தித்து, மல்டி வைட்டமின் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை