உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஜயகாந்த் பிறந்த நாளில் மக்களுக்கு அன்னதானம்

விஜயகாந்த் பிறந்த நாளில் மக்களுக்கு அன்னதானம்

வால்பாறை; தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்தின், 73வது பிறந்த நாள் விழா வால்பாறையில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, தே.மு.தி.க., நகர பொறுப்பாளர் பாலாஜிரவீந்தரன் தலைமை வகித்தார். வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்த விழாவில், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், நகர பொருளாளர் சிவா, பொதுக்குழு உறுப்பினர் சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல் வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியிலும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை