உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை அரசு மருத்துவமனையில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

கோவை அரசு மருத்துவமனையில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

கோவை; கோவை அரசு மருத்துவமனை, நவீன சமையலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா தலைமையில் குழு நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.கோவை அரசு மருத்துவமனையில், 9000 பேர் நாள் தோறும் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இதில், 2000 பேருக்கு தினந்தோறும் சமையல் செய்யப்பட்டு காலை, மதியம், இரவு உணவுகள் வழங்கப்படுகின்றன. இதில், உணவு வினியோகத்தில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் பெறப்பட்டன. இதுபோன்ற புகாரை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நேற்று காலை, 11:00 மணியளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, '' அரசு மருத்துவமனை சமையலகத்திலும், உணவு வினியோக முறையும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது, கண்டறியப்பட்ட சிறு சிறு குறைபாடுகளை சரிசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ