உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று கால்பந்து போட்டி

இன்று கால்பந்து போட்டி

வால்பாறை: வால்பாறை அருகே, தாலுகா அளவிலான கால்பந்து போட்டி இன்று (27ம் தேதி) நடக்கிறது. வால்பாறை நகர த.வெ.க., சார்பில் தாலுகா அளவிலான கால்பந்து போட்டி இன்று (27ம் தேதி) காலை மாணிக்கா கால்பந்து விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. போட்டியில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த, 12 அணியினர் பங்கேற்கின்றனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறும் அணிக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படும். விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, த.வெ.க., வால்பாறை நகர தலைமை கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !