உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொப்பரை விவசாயிகளுக்கு ரூ. 4.51 கோடி பொருளீட்டுக்கடன்

கொப்பரை விவசாயிகளுக்கு ரூ. 4.51 கோடி பொருளீட்டுக்கடன்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக, விவசாயிகள் பொருளீட்டுக்கடன் பெற்றுள்ளனர்.கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வடக்கிபாளையம் துணை விற்பனை கூடத்தில், 3,600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நான்கு கிடங்குகள் உள்ளன. அதில், நடப்பு நிதியாண்டில், நவ., 15ம் தேதி வரை 96 விவசாயிகள், 1,960 மெட்ரிக் டன் கொப்பரையை இருப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு பொருளீட்டுக்கடனாக, 4.51 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.விற்பனை கூடத்தில், 6 வியாபாரிகள், 410 மெட்ரிக் டன் அளவுக்கு விளை பொருட்களை இருப்பு வைத்து, ரசீது பெற்று வங்கி வாயிலாக, 2.79 கோடி ரூபாய் பொருளீட்டு கடன் பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு, வியாபாரிகளுக்கு அதிக தொகை வங்கியின் வாயிலாக பொருளீட்டுக்கடனாக பெற்று கொடுத்ததற்கு, கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேசிய மின்னணு களஞ்சிய நிறுவனம் நற்சான்று மற்றும் கேடயம் வழங்கி உள்ளது.நடப்பு ஆண்டில், தற்போது வரை, 2021 மெட்ரிக் டன் அளவு விளை பொருட்களை, 2.25 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 335 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.மேலும், விற்பனை கூடத்தில் உலர்கலங்கள் வசதி உள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உலர வைத்து, தரம் பிரித்து நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை