box பூங்கா மேட்டருக்கு
புதிய நிபந்தனைகள்: பூங்காவை தூய்மை பணியாளர் மூலம் தினசரி சுத்தப்படுத்த வேண்டும் செடி, மரம், புல் வெளியை பராமரிக்க தோட்டக்காரரர் நியமிக்க வேண்டும் பிளம்பர், எலக்ட்ரீசியன் மூலம் மாதம் இரு முறை குழாய், பாசனம், விளக்கு, வயரிங் ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். சூப்பர்வைசர் மூலம் தினசரி பராமரிப்பு பணியை கண்காணிக்க வேண்டும். தினசரி பணி குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். 50 வயதிற்குட்பட்ட உடற்தகுதியுடன் இருப்பவரை செக்யூரிட்டியாக நியமிக்க வேண்டும். சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு மாதம் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். பி.எப், இ.எஸ்.ஐ உள்ளிட்டவற்றை அரசு நிர்ணயித்த தேதியில் பிடித்தம் செய்து சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். மீண்டும் பழைய நிறுவனங்களுக்கே பூங்காக்களின் அவல நிலைக்கு 'கமிஷன்' கரைவேட்டிகளும், 'கரப்ஷன்' அதிகாரிகளுமே காரணம். தவெக ஆட்சியில் டெண்டரில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கறாராக சொல்லப்பட்டுள்ளது. இரு திராவிட ஆட்சியில் பழம் தின்று கொட்டை போட்ட பெரிய ஒப்பந்த நிறுவனங்களின் ஆதிக்கம் மாநகராட்சியில் இப்போது அதிகம் உள்ளது. திமுக ஆட்சியில் கோலோச்சிய இரண்டெழுத்து நிறுவனமே, பூங்கா பராமரிப்பு தொடர்பான 70 சதவீதம் டெண்டர்களை கைப்பற்றியுள்ளது.