சிறுமுகை அருகே வெளிமாநில மது பறிமுதல்
மேட்டுப்பாளையம், : சிறுமுகை அருகே சென்னம்பாளையத்தில், 200க்கும் மேற்பட்ட வெளிமாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை சென்னம்பாளையம் பகுதியில், சட்டவிரோதமாக வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று முன் தினம், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுமுகை போலீசார், அப்பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு சொந்தமான மளிகை கடையில், சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அங்கு பெட்டி, பெட்டியாக 200க்கும் மேற்பட்ட, கர்நாடக மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.--