வனத்து சின்னப்பர் ஆலய தேர் திருவிழா
வால்பாறை; புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தேர்த்திருவிழாவில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி புனித வனத்துசின்னப்பர் ஆலயம். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா, கடந்த, 2ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நாள் தோறும் காலை, மாலை கூட்டுபாடற்திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடும் நடைபெற்றது.முக்கிய நிகழ்வாக, கடந்த 8ம் தேதி மாலை ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ரொட்டிக்கடை, லோயர்பாரளை, அப்பர்பாரளை ஆகிய எஸ்டேட் பகுதியிலிருந்து புனித வனத்துசின்னபர் சொரூபம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு திருவிழா திருப்பலியும், அதனை தொடர்ந்து ஆலயத்தை சுற்றி அம்பு நேர்ச்சையும் நடைபெற்றது. மாலையில் ஆலய பங்குதந்தை ஜெரால்டின், புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஜார்ஜ்சகாயராஜ், புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை பெனிட்டோ ஆகியோர் இணைந்து கூட்டுப்பாடற்திருப்பலி நிறைவேற்றினர். விழாவில், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.