உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரையாடு நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை

வரையாடு நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை

வால்பாறை, ; ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. உலகின் அரிய வகை வனவிலங்குகளின் ஒன்றான வரையாடு, சிங்கவால்குரங்குகள் வால்பாறை மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளன.இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து வால்பாறை மலைப்பகுதிக்கு வளைந்து நெளிந்து செல்லும் ரோட்டில், வரையாடுகள் அதிக அளவில் உள்ளன.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் தற்போது குளு... குளு... சீசன் நிலவும் நிலையில் இயற்கையை ரசிக்க சுற்றுலாபயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் மத்தியில் வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும்.வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தவோ, வரையாடுகளை போட்டா எடுப்பதோ, செல்பி எடுக்கவோ, வரையாடுகளை துன்புறுத்தவோ கூடாது. மீறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ