உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவன தின விழா

பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவன தின விழா

கோவை; பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவன தின விழா, நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், “ஆப்பரேஷன் சிந்தூர், இரண்டே நாட்களில் வெற்றிகரமாக முடிவடைந்ததற்கு முக்கிய காரணம், சரியாக செய்தி அனுப்பிய செயற்கைக்கோள்கள்,'' என்றார். நிகழ்வில், கல்லூரியின் முன்னாள் மாணவர்களான கிரிதர கோபாலன் (நிர்வாக இயக்குனர், சியரா ஒடிசி மலேசியா) கோவிந்தராஜ் வெள்ளையன் (உரிமையாளர், லோகி டு லசி, சென்னை) ஜெயசீலன் (துணை கண்காணிப்பாளர், சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை) மற்றும் குமாரி (தலைமை செயல் அதிகாரி, ஹர்ஷா ப்ளோ டெக்னாலஜிஸ், கோவை) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், பி.எஸ்.ஜி., அண்டு சன்ஸ் அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ