உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து மொபைல் பறித்த நான்கு பேர் கைது

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து மொபைல் பறித்த நான்கு பேர் கைது

கோவை: நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த 29 வயது வாலிபர் சரவணம்பட்டியில் ஒரு மேன்ஷனில் தங்கிருந்து சிங்காநல்லுார் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் 'கிரைண்டர் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அறிமுகமான நபர் ஒருவர், அவரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட அழைத்துள்ளார். மேலும், காளப்பட்டி ரோடு, மகா நகரில் உள்ள ஒரு காலிஇடத்துக்கு வரும்படி கூறினார். இதையடுத்து வாலிபர் கடந்த 25ம் தேதி நள்ளிரவு செயலியில் பழகிய நபரை சந்திக்க அங்கு சென்றார். அப்போது அங்கு காத்திருந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி, வாலிபரின் மொபைலை பறித்துள்ளனர். மேலும், அவரின் 'ஜி பே.,' பாஸ்வேர்டை கேட்டு மிரட்டினர். வாலிபர் தர மறுத்ததால், அவரை கத்தியால் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் குத்திவிட்டு, அவரிடம் இருந்த மொபைல் மற்றும் பைக்கை பறித்து சென்றனர். இதையடுத்து, சஞ்சய் கிஷோர், அவரது நண்பர்கள் சரவணம்பட்டியை சேர்ந்த மவுளீஸ்வரன், 20, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திஸ், 19 மற்றும் வால்பாறையை சேர்ந்த வினோத், 19 ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ