உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம் செய்த நால்வர் கைது சிக்னல் கிடைக்காததால் சேரன் எக்ஸ்பிரஸ் தப்பியது

மதுபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம் செய்த நால்வர் கைது சிக்னல் கிடைக்காததால் சேரன் எக்ஸ்பிரஸ் தப்பியது

கோவை; குடிபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம் செய்த நான்கு பேரை, போலீசார் சிறையில் அடைத்தனர். சிக்னல் கிடைக்காததால் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், விபத்தில் இருந்து தப்பியது.கோவை - சென்னை - கோவை இடையே(12673/12674) எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில், நேற்று காலை 6:00 மணிக்கு கோவை சந்திப்பு அருகே வந்த போது, சிக்னல் கிடைக்காமல் நிறுத்தப்பட்டது.ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் சோதனையில், கோவை சந்திப்பில் இருந்து சிறிது துாரத்தில், தண்டவாளம் டிராக் மாற்றும் அமைப்பில் கற்கள் வைக்கப்பட்டிருப்பதால், சிக்னல் கிடைக்காதது தெரிந்தது. தண்டவாளத்திலும் கற்கள் போடப்பட்டிருந்தன. கற்களை அகற்றி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் விசாரணையில், நான்கு பேர் தண்டவாளத்தில் கற்களை போட்டது தெரிந்தது. அப்பகுதியில் சுற்றித்திரிந்த நான்கு பேரையும் பிடித்தனர்.விசாரணையில், அவர்கள் துாத்துக்குடியை சேர்ந்த வின்சென்ட் ராஜ், 20, விஜய்சங்கர், 21, சதீஸ்குமார், 21, புவனேஸ்குமார், 22 எனத் தெரிந்தது. போலீசார் நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ரயில்வே போலீசார் கூறியதாவது:கைதான நால்வரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இதில் சதீஸ்குமார் என்பவரின் தம்பி, தென்னம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை பார்க்க நான்கு பேரும், நேற்று முன்தினம் இரவு, கோவை வந்துள்ளனர்.சதீஸ்குமாரின் தம்பியை போனில் அழைத்த போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து நான்கு பேரும் மது அருந்தி உள்ளனர். கோவை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். நேற்று காலை, தண்டவாளம் வழியாக நடந்து சென்ற நான்கு பேரும், மதுபோதையில் அங்கிருந்த டிராக் மாற்றும் பகுதியிலும், தண்டவாளத்திலும் கல்லை போட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை