நான்கு வழிச்சாலை பணி; மின்கம்பங்கள் இடமாற்றம்
பொள்ளாச்சி; பல்லடம் - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையாக மாற்ற மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.பொள்ளாச்சி அருகே, கிணத்துக்கடவு நெடுஞ்சாலை உட்கோட்டம், சுல்தான்பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பல்லடம் - பொள்ளாச்சி ரோடு, காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரை, அரசூர் பிரிவு முதல் வடசித்துார் பிரிவு வரை இருவழிப்பாதையில் இருந்து, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது, ரோடு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.இதை தொடர்ந்து, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், 2024-25ன் கீழ், காட்டம்பட்டி பிரிவு முதல் காட்டம்பட்டி வரை, பெரிய நெகமம் முதல் நெகமம் வரை, சின்னேரிபாளையம் முதல் கருமாபுரம் பிரிவு வரையில் நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.