உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு வழிச்சாலை பணி; மின்கம்பங்கள் மாற்றிமைப்பு

நான்கு வழிச்சாலை பணி; மின்கம்பங்கள் மாற்றிமைப்பு

பொள்ளாச்சி : பல்லடம் - பொள்ளாச்சி நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்காக, மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.கிணத்துக்கடவு உட்கோட்டத்துக்கு உட்பட்ட, சுல்தான்பேட்டை பிரிவுக்கு உட்பட்ட, பல்லடம் - பொள்ளாச்சி ரோடானது காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரை, மற்றும் அரசூர் பிரிவு முதல் வடசித்துார் பிரிவு வரை இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சாலைப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது.இதை தொடர்ந்து, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின், 2024 - 25ன் கீழ், காட்டம்பட்டி பிரிவு முதல் காட்டம்பட்டி வரை, பெரிய நெகமம் முதல் நெகமம் வரை மற்றும் சின்னேரிபாளையம் முதல் கருமாபுரம் பிரிவு வரையில் நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட உள்ளது.அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை