உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மணம் பரப்பும் காபி; கர்நாடகா முதலிடம்

மணம் பரப்பும் காபி; கர்நாடகா முதலிடம்

காபி என்பது உலகின் பிரபலமான பானம். தெற்கு எத்தியோப்பியாவை தாயகமாக கொண்ட காபி செடி, இன்று உலகின் பல்வேறு நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. இது, பூமத்திய ரேகையின் அருகில் உள்ள இடங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்தியாவில், ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின், அதிகளவில் காபி பயிரிடப்பட்டது. இந்தியாவில் காபி பயிரிடுவதில், கர்நாடகா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும், கேரளா மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. கர்நாடகாவின் கூர்க் மலைப்பகுதியும், தமிழகத்தின் ஏற்காடு மலைப்பகுதியும் காபி பயிர் செல்வதில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இந்தியாவை பொறுத்தவரை, தென்னிந்தியாவில் காபி அதிகம் பருகப்படுகிறது. காபி குறித்த அஞ்சல் தலை, 2017ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டது.(நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம். இதையொட்டி, தினம் ஒரு தபால் தலையின் வரலாறை காண்போம்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி