உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக லாபம் தருவதாக அதிகாரியிடம் மோசடி

அதிக லாபம் தருவதாக அதிகாரியிடம் மோசடி

கோவை : கோவை மாவட்டம் கணபதி, கே.ஆர்.ஜி., நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 47. மின் வாரிய உதவி செயற் பொறியாளர். இவரது போன் எண்ணுக்கு கடந்த அக்., 24ம் தேதி, ஒரு குறுஞ்செய்தி வந்தது.அதில், தங்களின் 'ஸ்பிரெட் எக்ஸ் குளோபல் லிமிடெட்' நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்த பணத்திற்கு, அதிக லாபம் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.கார்த்திகேயன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் கூறியதை நம்பி, பல்வேறு தவணைகளில் ரூ. 8 லட்சத்து 30 ஆயிரத்து 786 பணத்தை, மோசடி நபர்கள் அளித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.பணம் அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும், லாபம் வராமல் இருந்ததால், அவர்களை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது அவர்கள், மேலும் பணம் முதலீடு செய்தால், மொத்தமாக முதலீடு, லாபம் அனைத்தையும் தருவதாக தெரிவித்துள்ளனர்.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயன், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடி நபர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை