உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கான இருதய ஆலோசனை இலவச முகாம்

கே.எம்.சி.எச்.,ல் குழந்தைகளுக்கான இருதய ஆலோசனை இலவச முகாம்

அ விநாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச்.,ல் பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, இருதய இலவச ஆலோசனை முகாம், கடந்த 14ம் தேதி துவங்கியது; ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடக்கிறது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: மருத்துவமனையில் இருதயம் தொடர்பான எந்த பிரச்னையாக இருந்தாலும், அதற்கு தீர்வு காணும் வகையில் உடனடியாகவும், சிறந்த முறையிலும் சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிளும் உள்ளன. இருதயம், இருதய அறுவை சிகிச்சை, இருதய மின் செயல்பாடு, இருதய சிகிச்சை மயக்க மருந்து, தீவிர சிகிச்சை மற்றும் பிற துறைகளை சேர்ந்த அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் ஒருங்கிணைந்து இருதய மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. அனைத்து இருதய நோய்களுக்கும் சர்வதேச தரத்திலான சிகிச்சை அளித்து வருகிறோம். குழந்தைகளுக்கான பிரத்யேக அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு, அதிக படுக்கை வசதியுடன் உள்ளது. இதில், குழந்தைகள் இருதய மருத்துவ ஆலோசகர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழு ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கிறது. குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், தோல் நீல நிறமாக மாறுவது, விளையாடும்போது சோர்வு, அடிக்கடி நுரையீரல் தொற்று, உடல் எடை அதிகரிக்காமல் இருப்பது, ஏற்கனவே இருதய சிகிச்சை செய்தது, குடும்பத்தில் யாருக்கேனும் இருதய நோய், மரபணுக்குறைபாடு, பிறவி இருதய கோளாறு இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று தேவையான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும். இருதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் கருதி, மருத்துவமனையில் இலவச முகாம் கடந்த 14ம் தேதி துவங்கியது; ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடக்கிறது. காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், மருத்துவமனை குழந்தைகளுக்கான சிறப்பு இருதய சிகிச்சைத்துறை டாக்டர் துரைசாமி மற்றும் டாக்டர் மூர்த்தி பங்கேற்று ஆலோசனை வழங்குகின்றனர். முகாமில் பங்கேற்போருக்கு, மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 87548- 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை